வர்த்தக மற்றும் முதலீட்டுக் கலந்தாய்வு அமைப்புமுறைக்கான முதலாவது கூட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு சீனா-ஐரோப்பா முயற்சி

சீன வணிக அமைச்சகத்தின் துணைத் தலைவரும், சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தையின் துணைப் பிரதிநிதியுமான லிங் ச்சி, உள்ளூர் நேரப்படி ஜூன் 9ஆம் நாள், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்தில், ஐரோப்பிய ஆணையத்தைச் சேர்ந்த வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு வாரியத்தின் தலைவரான திட்டே ஜூல் ஜோர்கென்சன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப்பேச்சுவார்த்தையின் போது, சீன-ஐரோப்பிய வர்த்தக மற்றும் முதலீட்டுக் கலந்தாய்வு அமைப்புமுறைக்கான ஏற்பாட்டுப் பணிகள் குறித்து இரு தரப்பினரும் ஆழமாகவும் பன்முகங்களிலும் விவாதித்தனர்.

சீன-ஐரோப்பிய வர்த்தக மற்றும் முதலீட்டுக் கலந்தாய்வு அமைப்புமுறையின் முதலாவது கூட்டத்தில் பயனுள்ள பலன்களை உருவாக்க இரு தரப்பும் பாடுபட வேண்டும். அதோடு, இரு தரப்பினரும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவை நிதானப்படுத்துவதோடு, தொடரவல்ல வள்ச்சியை விரைவுபடுத்த முயற்சி செய்யவும் ஒப்புக்கொண்டனர்.

You May Also Like

More From Author