இவ்வாண்டின் முதல் 8 திங்கள்காலத்தில் உயர்ந்த சீனத் தொழிற்துறையின் இலாபம்

இவ்வாண்டின் முதல் 8 திங்கள்காலத்தில் சீனாவின் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் மொத்த இலாபத் தொகை 4 இலட்சத்து 65 ஆயிரத்து  273 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 0.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் திங்கள் இறுதியில், இத்தொழில் நிறுவனங்களின் மொத்தச் சொத்துத் தொகை ஒரு கோடியே 73 இலட்சத்து 71 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 4.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இதன் கடன் தொகை ஒரு கோடியே 11 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 4.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. சொத்துக் கடன் விகிதம் 57.6 விழுக்காடாகும். இது, கடந்த ஆண்டை விட 0.2 விழுக்காடு புள்ளிகள் குறைந்து காணப்பட்டுள்ளது.

 

You May Also Like

More From Author