ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று சென்ட்ரல் – அரக்கோணம் இடைய 10 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலும், மூர்மார்கெட்டில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கும், இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
திருவள்ளூரில் இருந்து இன்று இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும், பட்டாபிராமில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராமில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 4.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயிலும், மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 3.50 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் புறப்பட்டு, மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.