கேரள அரசியலில் திருப்புமுனை: திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக வெற்றி  

Estimated read time 1 min read

திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, இது கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை என்று வர்ணித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது சமூக ஊடகப் பதிவில், திருவனந்தபுரம் மக்களுக்கு நன்றி தெரிவித்து, இந்த வெற்றியைப் பாராட்டினார்.
அவர் தனது பதிவில், “திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ பெற்ற ஆணை, கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை.
மாநிலத்தின் வளர்ச்சிக்கான அபிலாஷைகளை எங்கள் கட்சியால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்தத் துடிப்பான நகரத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் ‘வாழும் வசதி மேம்பாட்டிற்காக’ (Ease of Living) எங்கள் கட்சி உழைக்கும்.” என்று கூறியுள்ளார்.

You May Also Like

More From Author