மத்திய நிதியமைச்சர் மீது பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு  

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிர்மலா சீதாராமன் மற்றும் பிறருக்கு எதிராக ஜனதிகர் சங்கர்ச பரிஷத்தின் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர், தற்போது ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்தி மிரட்டி பணம் பறிப்பதில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினார்.

ஆதர்ஷ் ஐயர் அளித்த புகாரில், பாஜகவின் தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜேபி நட்டா மற்றும் கர்நாடக பாஜகவின் முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல் போன்ற பல உயர்மட்ட பாஜக தலைவர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author