கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலத்தின் பெயரில் வாக்கு கேட்டதற்காகவும், அதனால் தேர்தல் நடத்தை விதிகளை(எம்சிசி) மீறியதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் சமீபத்தில் ஆற்றிய உரையின் போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலத்தின் பெயரில் வாக்கு கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதற்காக தாக்கல் செய்த மனு தகுதியற்றது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதை தாக்கல் செய்த மனுதாரர் தேர்தல் ஆணையத்திடமும் இது தொடர்பாக மனு அளித்திருக்கிறார்.