தைவான் பிரச்சினையில் தெளிவற்ற நிலை என்ற பேச்சுக்கு இடம் இல்லை: வாங்யீ

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ செப்டம்பர் 28ஆம் நாள் நியூயார்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் ஐ.நா பொதுப் பேரவையின் 79ஆவது அமர்வின் பொது விவாதத்தில் கலந்து கொண்டு தைவான் பிரச்சினை குறித்து சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார்.


அவர் கூறுகையில், தைவான் சீனாவின் உரிமைப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். இது வரலாறும் உண்மையுமாகும். இது பற்றிய தெளிவற்ற நிலை என்ற பேச்சுக்கு இடம் இல்லை.

சீனா ஒருமைப்பாட்டை நனவாக்குவது திண்ணம். தைவான் தாய்நாட்டின் இணைப்புக்குத் திரும்புவது திண்ணம். இது எவராலும் எந்த சக்தியாலும் தடுக்கப்பட முடியாத வரலாற்று போக்காகும் என்றார்.

You May Also Like

More From Author