ஹுவாங் பு ராணுவ கல்லூரி நிறுவப்பட்டதன் 100ஆவது ஆண்டு நிறைவு மற்றும் இந்த ராணுவ கல்லூரியின் சக மாணவர்கள் சங்கம் நிறுவப்பட்டதன் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், கட்சி மத்திய கமிட்டியின் சார்ப்பில், ஹுவாங் பு ராணுவ கல்லூரியின் சக மாணவர்கள் சங்கத்துக்கு உளமார்ந்த வாழ்த்து தெரிவித்து, சீனா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்த ராணுவ கல்லூரியின் மாணவர்கள் மற்றும் அவர்களின் உற்றார் உறவினர்களுக்கு மனமார்ந்த வணக்கத்தை தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் கூறுகையில், ஹுவாங் பு ராணுவ கல்லூரி, சீனாவில் புரட்சி படைவீரர்களைப் பயிற்றுவிக்கும் முதலாவது கல்லூரியாகும். இக்கல்லூரியின் சக மாணவர்கள் சங்கம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சீனா மற்றும் வெளிநாடுகளில் வாழும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் உற்றார் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளும் நாட்டுப் பற்று குழுவாகும். இச்சங்கம் நிறுவப்பட்ட பின், தைவான் நீரிணை இரு கரைகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை விரிவாக்கி, தைவான் சுதந்திரத்தை எதிர்த்து, நாட்டின் ஒன்றிணைப்பை முன்னேற்றுவதற்கு ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், புதிய வளர்ச்சிப் போக்கில் இச்சங்கம் தைவான் சுதந்திரத்தை உறுதியாக எதிர்த்து, நாட்டின் ஒன்றிணைப்பை முன்னேற்றி, சீனக் கனவைக் கூட்டாக நனவாக்க ஆற்றலைத் திரட்ட வேண்டும் என்றும், ராணுவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் உற்றார் உறவினர்கள் சீன நவீனமயமாக்கத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்டு, வல்லரசு நாட்டின் கட்டுமானத்தையும் தேசிய மறுமலர்ச்சியின் மாபெரும் இலட்சியத்தையும் முன்னேற்றுவதற்கு பங்காற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.