தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு  

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையிலும் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது.

இந்நிலையில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:-

உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
29.09.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

You May Also Like

More From Author