சென்னை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்  

தமிழக அரசின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) பதவியேற்றுக் கொண்டனர்.

முன்னதாக, சனிக்கிழமை தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், பொன்முடி, கயல்விழி செய்வராஜ், மெய்யநாதன், மதிவேந்தன், ராஜகண்ணப்பன் ஆகியோரின் துறைகளை மாற்றியது.உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு கூடுதல் இலாகாவும் ஒதுக்கப்பட்டது.

மேலும், அமைச்சரவையில் இருந்த மனோ தங்கராஜ். செஞ்சி மஸ்தான், கே.ராமசந்திரன் ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டது.
மேலும், செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் நான்கு பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author