பாஜகவுக்கு கிடைத்துள்ள 18% வாக்குகள் பிரதமர் மோடிக்காக கிடைத்தவை- ஹெச். ராஜா

Estimated read time 0 min read

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும் அக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பெசிய ஹெச்.ராஜா, “காந்தி ஜெயந்தி முன்னிட்டு எப்படியாவது தமிழகத்தில் குறிப்பாக பெண் வாக்காளர்களை கருத்தில் கொண்டு திசை திருப்பும் விதமாகவும் குற்றவாளிகளை காப்பாற்றும் விதமாகவும் ஒரு கட்சி தமிழ்நாட்டில் இன்று மது ஒழிப்பு மாநாடா ..? மது ஊக்கவிப்பு மாநாடா ..? என்பது தெரியாத மாதிரி ஒரு மாநாடு நடத்துகிறது. தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசு மது ஊக்குவிக்கும் அரசு, ஏனென்றால் 500 மதுபான கடைகளை மூடுவேன் என்று சொல்லிவிட்டு ஆயிரம் தனியார் கிளப்புக்கு கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளனர், அந்த கிளப்பில் 150 உறுப்பினர்கள் தான் இருக்க வேண்டும் என்பதுதான் விதி, ஆனால் இங்கு விதிகள் ஏதும் கடைபிடிக்கப்படுவதில்லை, இந்த மது ஊக்குவிப்பு அரசாங்கம் அதன் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் என்றால் இது யாரை ஏமாற்றும் மாநாடு, இது மது ஒழிப்பு மாநாடா இது மது உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள் மது பிரியர்கள் மாநாடா?

மது மாநில கொள்கை மட்டும்தான் உள்ளது, அது ஒன்றிய அரசு கொள்கை இல்லை, மதுக்களை மதுக்கடைகளை திறப்பது திமுக அரசு கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வெட்கமே இல்லாமல் இந்த ஆண்டு 1700 கோடி ரூபாய் மதுக்கடை மூலம் அதிக வருமானம் வந்துள்ளது என்பது திமுக கூறியிருப்பது வெக்க கேடான விஷயம். மதுக்கடைகளை திறந்தவர்களே தான் மதுக்கடைகளை மூட வேண்டும். மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு. மக்களை ஏமாற்றுகிற மாநாடு.

கோயில் கட்டுமானங்கள் தரமற்ற முறையில் உள்ளது, அதனால்தான் பழனி கோபுரத்தில் மேற்பகுதி சிதலமடைந்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் அறநிலைத்துறை மூலம் புனரமைப்பு செய்யப்பட்ட கோயில்களை கள ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கோயில் புணர அமைப்பு பணிகளில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் ஊழல் நடந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வார் என்று ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அவர் கூறியிருந்தது போலவே செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றார். அதிலிருந்தாவது புரிந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு கொடுத்திருக்கக் கூடாது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக 15 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்சியை கொண்டு சென்ற பாதையில் தற்போது அதிமுக கட்சி செல்கிறதா.. என்று அதிமுக தொண்டர்கள் நினைத்திருக்கலாம் , அதனால் வாக்கு சதவீதம் குறைந்திருக்கலாம், அந்த விவாதத்திற்குள் நாங்கள் செல்லவில்லை. எங்களுக்கு கிடைத்துள்ள 18% வாக்குகள் பிரதமர் மோடிக்காக கிடைத்த வாக்குகள்.

Please follow and like us:

You May Also Like

More From Author