பிரதமர் மோடி போன்று கடின உழைப்பாளி இந்தியாவில் இல்லை! – அண்ணாமலை பெருமிதம்!

Estimated read time 1 min read

சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தனியார் ஊடகம் சார்பில், இந்தியக் குடியரசுத் தலைவரின் பத்திரிகை செயலாளர், அஜய் சிங் அவர்கள் எழுதிய, ‘The Architect of the New BJP’ என்ற நூலின் தமிழாக்கம் ‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி’ நூல் அறிமுக விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று நுாலை வெளியிட்டு, சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, 1995 ஆம் ஆண்டிலிருந்து, 2022 ஆம் ஆண்டு வரை, சுமார் 27 ஆண்டுகள் நெருக்கமாகக் கவனித்த மூத்த ஊடகவியலாளர் அஜய் சிங், வெளி உலகிற்குத் தெரியாத நமது பிரதமர் மோடியின் மற்றுமொரு பரிமாணத்தை இந்த நூலின் வழியாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் என்றால் மிகையாகாது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த நூலை, அதன் தாக்கம் சற்றும் குறையாமல், அப்படியே ரசிக்கும் வண்ணம் தமிழில் மொழிபெயர்த்துள்ள ரங்காச்சாரிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து மொழியிலும் பிரதமர் மோடி குறித்து புத்தகம் வெளியான நிலையில், தமிழில் வெளிவராதது வருத்ததை தந்தது. இந்நிலையில் இன்று இந்த புத்தகம் வெளியாவது மிகுந்த மகிச்சியை அளிக்கிறது. திரைக்கு பின்னால் உள்ள மோடி குறித்து இந்த புத்தகத்தில் படிப்பீர்கள்.

உலகளவில் கடைக்கோடி தொண்டன் உயர் பதவிக்கு வருவது, மிக கடினம். அதிலும் இந்தியாவில் நடப்பது, மிக அரிது. மோடி போன்று கடின உழைப்பாளி இந்தியாவில் எங்கும் இல்லை எனத் தெரிவித்தார். மோடி அனைத்து துறைகளிலும் வல்லவர்.

அவரின் கடின உழைப்பை இந்த புத்தகத்தில் காணலாம். பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, புதிமையான திட்டங்கள் கெண்டு வந்து, இந்தியாவிலே முதல் முறையாக உலக முதலீட்டு மாட்டை நடத்தி காட்டியவர்.  கடந்த பத்து ஆண்டுகளில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.  தனிமனித உழைப்பு எப்படி பட்ட சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கும் என்பதை இந்த புத்தகம் உணர்த்தும் எனத் தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author