சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போர் என்பது நடைபெற்று வருகிறது. இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் கடத்தி சென்ற நிலையில், அதில் 117 கைதிகளை போர்க்கால அடிப்படையில் இஸ்ரேல் உயிருடன் மீட்டது.
மேலும், ஹமாஸ் அமைப்பில் கொல்லப்பட்ட கைதிகளின் உடல்களையும் இஸ்ரேல் மீட்டுள்ளது. மேலும், 101 இஸ்ரேலியர்கள், தற்போது ஹமாஸ் வசம் உள்ள நிலையில் இன்னுமும் இஸ்ரேல் அவர்களை மீட்க போரிட்டு வருகிறது. இதில், பலரும் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லெபனான், காசா, சிரியா உள்ளிட்ட பகுதிகளில் வான்வெளித் தாக்குதல் அல்லது தரைவழி தாக்குதலைத் இஸ்ரேல் தீவிரப்படுத்தி தாக்குதல் நடத்தி வருவார்கள். மேலும், ஹமாஸுக்கு ஆதரவாக வந்த ஹிஸ்புல்லா அமைப்பினர், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்பு மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதால் இஸ்ரேல் அதற்கு பதிலடியாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதன் விளைவாக நேற்று இஸ்ரேல், சிரியா பகுதியில் வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் முதற்கட்ட தகவலின் படி 39 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்தது. ஆனால், உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அப்போதே அறிவித்திருந்த நிலையில், தற்போது 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.