இந்தியாவில் பாஸ்போர்ட் சேவை இணையதளம் இன்று இரவு 8:00 மணி முதல் அக்டோபர் 7-ம் தேதி காலை 6:00 மணி வரை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தொழில்நுட்ப காரணங்களால் பாஸ்போர்ட் சேவா இணையதளம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 7-ம் தேதி வரை பாஸ்போர்ட் அப்ளை செய்ய முடியாது. இதற்கு முன்பும் கடந்த மாதம் ஏற்கனவே தொழில்நுட்ப காரணங்களால் பாஸ்போர்ட் சேவை இணையதளம் முடங்கியது.
அதாவது பாஸ்போர்ட் சேவா இணையதள திட்ட சேவை www.passportindia.gov.in என்ற இணையதள முகவரி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. மேலும் இதன் காரணமாகத்தான் இன்று முதல் பாஸ்போர்ட் அப்ளை பண்ண முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.