அக்டோபர் 15-16 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்குச் செல்வார் என்று வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியக் குழுவை ஜெய்சங்கர் வழிநடத்துவார் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக, இந்த மாதம் திட்டமிடப்பட்ட எஸ்சிஓ கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு அனுப்பியதை ஆகஸ்ட் மாதம் அமைச்சகம் உறுதி செய்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்தது.
எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்
