புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை – பெருமாள் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்!

Estimated read time 1 min read

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொடி தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூரின் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதிகாலை முதலே சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author