அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக புதன்கிழமை லாஸ் வேகாஸுக்குச் சென்றபோது, அவருக்கு கோவிட் -19 க்கு சோதனை செய்யப்பட்டது.
அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், தற்போது லேசான அறிகுறிகளே இருப்பதால், சுயமாக தனிமைப்படுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக அவரது தேர்தல் உரை ரத்து செய்யப்படுவதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரீன் ஜீன்-பியர் அறிவித்தார்.
இதே நேரத்தில், அமெரிக்கா ஜனாதிபதி பைடன் இதனை தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி படுத்தினார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோவிட்-19 தொற்று உறுதி
