பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள்  

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி-தாம்பரம் இடையே பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னையில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டாட செல்வார்கள்.

இந்த பண்டிகை நாட்களில் ரயில்களிலும், பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.
இந்த ஆண்டில் இந்த மாதத்தில் (அக்டோபர்) ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை வருகிறது.
ஆயுத பூஜை வருகிற 11-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

12-ந்தேதி விஜயதசமி, 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக உள்ளன.

You May Also Like

More From Author