சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாடு, சீன-ஆப்பிரிக்க உறவைப் பெரிதும் முன்னேற்றியுள்ளது.
நமீபியா அரசுத் தலைவர் நாங்கோலோ முபும்பா, சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி அளித்த போது கூறுகையில், அறிவியல், தொழில் நுட்பம், புத்தாக்கம் ஆகியத் துறைகளின் வளர்ச்சிச் சாதனைகளைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்வதை உத்தரவாதம் செய்யும் விதம், சீனாவும் ஆப்பிரிக்காவும் கையோடு கை கோர்த்து, உலகத்துக்கு அமைதியான மற்றும் நிதானமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இதை நனவாக்கினால், சீனாவும் ஆப்பிரிக்காவும் கூட்டாக முன்னேறி, உலக மக்களுக்கு உண்மையான செழுமையை விளைவிக்கும் என்றார்.
மேலும், சீனா, நமீபியாவின் உறுதியான கூட்டாளியாகும். இரு நாடுகளின் நட்புறவு பண்டைகாலம் தொட்டு நிலவுகின்றது. சீனா, நமீபியாவின் வளர்ச்சிக்கு உதவியளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தவிரவும், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த மூன்று உலக முன்மொழிவுகளை அவர் வெகுவாகப் பாராட்டினார். மேலும் நேர்மையான சர்வதேச ஒழுங்கை உருவாக்குவதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் தெரிவித்தார்.