சீனாவில் 2025ஆம் ஆண்டு கோடைக்கால தானிய விளைச்சல் அளவு 14 கோடியே 97 இலட்சத்து 40 ஆயிரம் டன்னாகும், இது, கடந்த ஆண்டை விட 0.1 விழுக்காடு குறைவு என்ற போதிலும் தானிய விளைச்சல் ஒட்டுமொத்தளவில் நிதானமாக இருக்கிறது.
2025ஆம் ஆண்டு சீனா முழுவதிலும் தானியங்கள் பயிரிடப்பட்ட நிலப்பரப்பு 2 கோடியே 66 இலட்சம் ஹெக்டராகும். ஒவ்வொரு ஹெக்டருக்கும் 5634 கிலோகிராம் தானியங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 1.5 கிலோகிராம் அதிகமாகும்.
2025ஆம் ஆண்டின் கோடைக்கால தானிய விளைச்சல் அமோகமாக இருந்ததோடு, ஆண்டு முழுவதுமான தானிய விளைச்சலுக்கு வலிமையான அடிப்படையை இட்டுள்ளது. உலகம் சிக்கலான சர்வதேச நிலைமையை எதிர்நோக்கி வரும் நிலையில், இவ்விளைச்சலானது பொருளாதாரம் தொடர்ந்து மீட்சியடைவதை விரைவுபடுத்துவதற்கு வலிமையான ஆதரவளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.