சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆம்நாள் காலை பெய்ஜிங்கில் இலங்கை தலைமை அமைச்சர்
அமரசூரியா
அம்மையாரைச் சந்தித்துரையாடினார்.
அப்போது
ஷிச்சின்பிங் கூறுகையில், இலங்கை நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் உரிமைப்
பிரதேசங்களின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காத்து சொந்த நாட்டின் நிலைமைக்கு ஏற்ற
வளர்ச்சிப் பாதையில் நடந்து செல்வதற்குச் சீனா ஆதரவளிக்கும். இலங்கையுடன் இணைந்து
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை உயர் தரத்துடன் கூட்டாக உருவாக்கி
துறைமுகப் பொருளாதாரம், நவீன வேளாண்மை, எண்ணியல் பொருளாதாரம், பசுமை பொருளாதாரம்,
சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்பைக் கூட்டாக விரிவாக்க விரும்புவதாகவும்
தெரிவித்தார்.
சீனாவுடனான
உறவுக்கு இலங்கை பெரும் கவனம் செலுத்தி வருகிறது என்றும், சீனாவுடன் இணைந்து
தெற்குலக பொது உரிமைகளைப் பேணிக்காக்க விரும்புகிறது என்றும் அமரசூரியா அம்மையார்
கூறினார்.