பிரதமரின் INTERNSHIP திட்டத்தின் கீழ் ITC, RELIANCE, TCS உள்ளிட்ட நிறுவனங்கள் பயிற்சியாளர்களை பணியமர்த்தத் தொடங்கியுள்ளன.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் பிரதமரின் INTERNSHIP திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு நாட்டின் முக்கிய நிறுவனங்களின் மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
மேலும், பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்திற்காக கடந்த 3 ஆண்டுகளில் 500 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.