கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் 100% கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்ற செய்தி காலையில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் மேலாண்மை அல்லாத பணிகளுக்கு 70 சதவீதமும், நிர்வாக நிலை ஊழியர்களுக்கு 50 சதவீதமும் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் இன்று காலை தெரிவித்தார்.
முன்னதாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தது போல 100 சதவீதம் இல்லை என்றும் அவர் தெளிவு படுத்தியுள்ளார்.