இன்று நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘கங்குவா’ படத்தின் ட்ரைலர் வெளியாகிறது என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அதேபோல இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ படத்தின் வெளியீட்டிற்காகவும் காத்துள்ளனர்.
படக்குழுவினரும் நகரம் வாரியாக, மாநிலம் வாரியாக தீவிரமாக ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடைசி நிமிட ட்விஸ்ட்டாக, இவ்விரு படங்களை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.