கிர்கிஸ்தானில் ஷிச்சின்பிங் எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் நூலின் 5ஆவது தொகுதிக்கான பரவல் நடவடிக்கை

ஷிச்சின்பிங் எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் நூலின் 5ஆவது தொகுதிக்கான பரவல் நடவடிக்கை ஜூலை 13ஆம் நாள் கிர்கிஸ்தானில் நடைபெற்றது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனா மற்றும் கிர்கிஸ்தானின் பல்வேறு துறையினர்களும், இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் ஷிச்சின்பிங் எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் நூலின் 5ஆவது தொகுதி குறித்து விவாதித்து பரிமாறிகொள்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்கள் கருத்து தெரிவித்தனர்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய மனித குலத்தின் பொது சமூக கட்டுமானம் எனும் கண்ணோட்டம், உலகளவில் செல்வாக்கு வாய்ந்த கருத்துகளாகவும் ஆலோசனையாகவும் விளங்கின்றது என்றும், சீனாவின் வளர்ச்சிக்கான உள்புற தர்க்கம், ஆட்சிமுறை அமைப்பு, நெடுநோக்குத் திட்டம் முதலியவை குறித்து ஆழமாக ஆராய்வது முக்கிய நடைமுறை அர்த்தம் வாய்ந்தது என்றும் கிர்கிஸ்தான் முன்னாள் அரசுத் தலைவர் ஒட்டன்பேயாவா அம்மையார் தெரிவித்தார்.

You May Also Like

More From Author