ஐ.நா.வின் உலக சுற்றுலா அமைப்பு ஏற்பாடு செய்த சிறந்த சுற்றுலா கிராமம் எனும் நிகழ்வு
அக்டோபர் 17ஆம் நாள் சீனாவின் ட்செ ஜியாங் மாநிலத்தின் ஹு ட்சோ நகரில் நடைபெற்றது.
இதில், சீனாவைச் சேர்ந்த 4 கிராமங்கள், 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா
கிராமங்கள் பட்டியலில் தேர்வு மூலம் சேர்க்கப்பட்டுள்ளன.
ட்செ ஜியாங் மாநிலத்தின் டீ காங் கிராமம்,
சிச்சுவான் மாநிலத்தில் உள்ள ஜி கா யீ கிராமம் உள்ளிட்ட இப்பட்டியலில் புதிகாக சேர்க்கப்பட்ட
4 சீனக் கிராமங்கள், இயற்கை நிலப்பரப்பு, பண்பாடு மற்றும் வளர்ச்சி பாதை
ஆகியவற்றில் வேறுபட்ட தனிச்சிறப்புகளைக் கொண்டுள்ளன. சீனாவின் ஊரக சுற்றுலா துறையில்
பலதரப்பட்ட வளர்ச்சி சாதனைகள் இந்த கிராமங்களில் வெளிகாட்டப்படுகின்றன.
தற்போதுவரை, சிறந்த சுற்றுலா கிராமம் என்ற
பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சீன கிராமங்களின் எண்ணிக்கை 19ஐ எட்டியுள்ளது.
