சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம், அக்டோபர் 8ம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் ச்செங் ஷன் ஜேய் அதில் கூறுகையில்,
தற்போதைய பொருளாதாரச் செயல்பாட்டில் ஏற்பட்ட புதிய நிலைமை மற்றும் பிரச்சினைகள் குறித்து, பொருளாதாரம் தொடர்ந்து மீட்டெடுப்பதை ஊக்குவிக்கும் ஒரு தொகுதி கொள்கைகளை சீனா வெளியிட்டது.
ஒட்டுமொத்த கொள்கையின் சுழற்சி எதிர்ப்பு கட்டுப்பாட்டை வலுப்படுத்த பல்வேறு தரப்புகள் பாடுபட வேண்டும். உள்நாட்டுத் தேவையை விரிவாக்கும் கொள்கையை, மக்களின் வாழ்க்கைக்கு நலன் அளிப்பது, நுகர்வை முன்னேற்றுவது உள்ளிட்ட முக்கிய துறைகளில் செயல்படுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சியில் முதலீட்டின் உந்து விசை பங்கை ஆக்கப்பூர்வமாக வெளிகொணர வேண்டும் என்று தெரிவித்தார்.