பூமியின் வறண்ட இடங்களில் ஒன்றாக அறியப்படும் சஹாரா பாலைவனத்தில்
பரவலாக மழை பெய்தது.
அல்ஜீரியா , சாட் , எகிப்து, லிபியா , மாலி , மேற்கு சஹாரா, சூடான் ஆகிய பகுதிகளை சகாரா உள்ளடக்கியுள்ளது. அங்கு மழை பெய்யாமல் கடும் வறட்சியாக காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், வடமேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளை வெப்ப மண்டல சூறாவளி தாக்கியது. இதன் எதிரொலியாக சஹாரா பாலைவனத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் பாலைவனம் குளம் போல் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது.