136ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி தொடக்கம்

136ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி அக்டோபர் 15ஆம் நாள் சீனாவின் குவாங்ச்சோ மாநகரில் தொடங்கியது. 30 ஆயிரத்திற்கும் மேலான தொழில் நிறுவனங்கள் இதில் நேரடியாக பங்கெற்றுள்ளன.

11 இலட்சத்து 50 ஆயிரம் புதிய வணிகப் பொருட்கள் இதில் வெளியிடப்பட்டன. இது கடந்த ஆண்டை விட மிக அதிகம். மேலும், 4 ஆயிரத்து 600 புதிய தொழில் நிறுவனங்கள் முதன்முறையாக இதில் கலந்துகொண்டுள்ளன.


இப்பொருட்காட்யில் எண்ணியல், நுண்ணறிவு பொருட்கள், கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது. பசுமையான, கார்பன் குறைந்த பொருட்கள், கடந்த ஆண்டை காட்டிலும் 130 விழுக்காடு அதிகம் என்று இப்பொருட்காட்சியின் செயலகத்தின் துணைத் தலைவர் சுங்வென்சான் தெரிவித்தார்.


அக்டோபர் 15ஆம் நாள் முதல் நவம்பர் 4ஆம் நாள் வரை நடைபெறும் இதன் இறக்குமதிப் பொருட்காட்சி 3 காலக்கட்டங்களாக நடைபெறும். இதில் 49 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 730 தொழில் நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.

You May Also Like

More From Author