சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 13ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர்உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்தினார். மகளிரின்
பன்முக வளர்ச்சியை விரைவுபடுத்த மேலும் பரந்தப்பட்ட ஒத்த கருத்துக்களை ஒன்றிணைத்து
மேலும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தினார். இது
குறித்து ஷிச்சின்பிங் 4 முன்மொழிவுகளை முன்வைத்தார். முதலாவது, மகளிரின்
வளர்ச்சிக்குத் துணையாக இருக்கும் சீரான சூழலைக் கூட்டாக உருவாக்க வேண்டும்.
இரண்டாவது, மகளிர் லட்சியத்தின் உயர் தர வளர்ச்சியை முன்னெடுக்கும் வலுவான உந்து
ஆற்றலைக் கூட்டாக வளர்க்க வேண்டும். மூன்றாவது, மகளிர் உரிமையை உறுதிப்படுத்தும்
நிர்வாக அமைப்பு முறையைக் கூட்டாக உருவாக்க வேண்டும். நான்காவது, உலக மகளிர்
ஒத்துழைப்பை முன்னேற்றுவிக்கும் புதிய அத்தியாயத்தைக் கூட்டாகப் படைக்க வேண்டும் என்றார்.
உலக மகளிர் வளர்ச்சி பற்றி ஷிச்சின்பிங் 4 முன்மொழிவுகளை முன்வைத்தார்
