ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் 81வது ஆண்டு நிறைவுக்கான கலந்துரையாடல் கூட்டம்

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 81வது ஆண்டு நிறைவுக்கான கலந்துரையாடல் கூட்டம் செப்டம்பர் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் தலைவருமான லீ ஷுலெய் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் முறையே உரை நிகழ்த்தி, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் மாபெரும் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியதோடு, வரலாற்றை மனதில் வைத்தல், போர் வீரர்களை நினைவுக் கூர்தல், அமைதியைப் பேணிமதித்தல், எதிர்காலத்தை உருவாக்குதல் ஆகியவற்றைக் கொண்ட மனவுறுதியையும், அமைதிக்கான வளர்ச்சிப் பாதையில் உறுதியுடன் முன்னேறுகின்ற விருப்பத்தையும் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author