சீன மூலவள மறுசுழற்சி குழுமத்திற்கு ஷிச்சின்பிங்கின் கட்டளை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் சமீபத்தில், சீன மூலவள மறுசுழற்சி குழுமம் நிறுவப்படுவது குறித்து முக்கிய கட்டளைப்பிட்டார்.

இக்குழுமம் நிறுவப்படுவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பசுமையான, கார்பன் குறைந்த சுழற்சி வளர்ச்சிப் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் அழகான சீனாவின் கட்டுமானத்தை பன்முகங்களிலும் விரைவுபடுத்துவதற்கான முக்கியக் கொள்கை தீர்மானமாகவும் ஏற்பாடாகவும் விளங்குகிறது.

புதிய வளர்ச்சி கருத்துக்களை இக்குழுமம் முழுமையாகவும் சரியாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், பொருளாதாரச் சுழற்சி தரத்தையும் நிலையையும் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்.

சீர்திருத்தத்தை முழுமையாக ஆழமாக்குதல், சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தின் மூலம், வல்லரசு கட்டுமானத்தைப் பன்முகங்களிலும் விரைவுபடுத்தி, சீனத் தேசிய மறுமலர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற வேண்டும் என்றார் அவர்.

Please follow and like us:

You May Also Like

More From Author