சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங் அக்டோபர் 17ஆம் நாள் மாலை முறையே அன்ஹூய் மாநிலத்தின் அன்ஜிங் நகரிலும் ஹெஃபைய் நகரிலும் கள ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் வலியுறுத்துகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வின் எழுச்சியை அன்ஹூய் மாநிலம் ஆழமாக நடைமுறைப்படுத்தி புதிய வளர்ச்சிக் கண்ணோட்டத்தைப் பன்முகங்கிலும் செயல்படுத்த வேண்டும் என்றார். மேலும், முக்கிய செல்வாக்கு வாய்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க பிறப்பிடம், புதிய தொழில்கள் ஒன்றுகூடும் இடம், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பின் முன்னேற்றத்தின் புதிய இடம், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் பன்முக பசுமைமயமாக்க மண்டலம் ஆகிவற்றைக் கட்டியமைப்பதிலும் தொடர்ந்து பாடுபட வேண்டும் எனக் குறிப்பிட்டார். புதிய வளர்ச்சி அமைப்பு முறையில் ஆழமாக இணைந்து வளர்வது, உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவது, அருமையான அன்ஹூயைப் பன்முகங்களிலும் கட்டியமைப்பது ஆகியவற்றில் மேலதிக சாதனைகளைப் படைக்க வேண்டும். சீனப் பாணி நவீனமயமாக்கலின் அன்ஹூய் அத்தியாயத்தை முயற்சியுடன் இயற்ற வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.