பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 31ஆவது அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பங்கெடுத்தார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் தொடர்புடைய தகவல்களை அறிமுகம் செய்தார்.
அவர் கூறுகையில், ஆசிய-பசிபிக் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றி, ஆசிய-பசிபிக் வளர்ச்சியின் புதிய யுகத்தை உருவாக்குவது குறித்து ஷி ச்சின்பிங் மூன்று முன்மொழிவுகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
முதலாவதாக, திறப்பு மற்றும் ஒருங்கிணைந்த ஆசிய-பசிபிக் ஒத்துழைப்புக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இரண்டாவதாக, பசுமை புத்தாக்கம் வாய்ந்த ஆசிய-பசிபிக் வளர்ச்சி இயக்காற்றலை வளர்க்க வேண்டும். மூன்றாவதாக, பொது நலன்கள் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை வாய்ந்த ஆசிய-பசிபிக் வளர்ச்சிச் சிந்தனையை நிலைநாட்ட வேண்டும் என ஷி ச்சின்பிங் தெரிவித்ததாக லின்ஜியான் குறிப்பிட்டார்.
மேலும், 2026ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை சீனா நடத்தும் எனத் தெரிவித்த அவர், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, ஆசிய-பசிபிக் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இப்பிரதேச மக்களுக்கு நன்மை புரிய சீனா விரும்புவதாகவும் லின்ஜியான் தெரிவித்தார்.