தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் சொந்த தொகுதியான மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனையூர் உழவர் சந்தை, கனமழையால் நீரில் மூழ்கியது.
25-க்கும் மேற்பட்ட கடைகள் நீரில் மூழ்கியதால் விற்பனைக்கு வைத்திருந்த காய்கறிகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
ஒவ்வொரு மழையின் போதும் உழவர் சந்தை நீரில் மூழ்கி காய்கறிகள் சேதம் அடைவதாகவும், எனவே, இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.