வங்கதேச அதிபரை பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டு மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து, சில மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஷேக் ஹசீனா தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து, புதிய அதிபராக முகமது ஷஹாபுதின் பதவியேற்றுக்கொண்டார். ஆனால், அவரது செயல்பாட்டிலும் அதிருப்தி அடைந்த மாணவர்கள், மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்தனர். டாக்காவில் பேரணி மேற்கொண்ட அவர்கள், புதிய அதிபரும் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதனை தொடர்ந்து அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட அவர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்பினர் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என மாணவ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.