ஓதுவார்கள், தமிழகத்தில் மன்னர் காலத்தில் முக்கிய பங்கு வகித்த கலைஞர்கள் ஆவர். இவர்கள் சைவ கோவில்களில் திருமுறைகள் உள்ளிட்ட பக்திப் பாடல்களை பாடி வந்தனர்.
சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய மன்னர்களில் ஒருவரான ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் மத மற்றும் கலாச்சார வாழ்க்கையில் இவர்கள் முக்கிய இடம் பெற்றனர்.
சிவபெருமானை போற்றும் தேவாரம் மற்றும் திருவாசகம் போன்ற பாடல்களைப் பாடிய ஓதுவார்கள், அந்தகாலத்தில் கோயில்களின் வழிபாட்டு முறையின் முக்கிய அங்கமாக இருந்தனர்.
தற்போது, இவர்கள் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே இருக்கும்போதிலும், தமிழ்நாட்டின் சில கோயில்கள் மற்றும் சமுதாயங்களில் இவர்கள் மரபு தொடர்ந்து பின்பற்றப்படுகின்றது.
ராஜரா சோழனின் சதயவிழா நவம்பர் 10 அன்று கொண்டாடப்படும் நிலையில், ஓதுவார்கள் குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.
சதய விழா 2024 ஸ்பெஷல்: இன்றைய ஓதுவார்களின் நிலைமை
