தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடநல் திருநாடு என்ற சொல்லை நீக்க வலியுறுத்தல்!

Estimated read time 0 min read

தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடநல் திருநாடு என்ற வார்த்தையை நீக்க கோரி தலைமை செயலாளருக்கு, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மனு அளித்துள்ளார்.

அண்மையில் டிடி தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, திராவிடநல் திருநாடு என்ற வரி தவறுதலாக விடுபட்டது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர் தமிழக தலைமை செயலாளருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடநல் திருநாடு என்ற சொல்லுக்கு பதிலாக, தமிழகமாம் திருநாடு என்ற சொல்லை இணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

4 வாரங்களில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author