ஏபெக் சிஇஓ உச்சி மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்

செப்டம்பர் 18ஆம் நாள், 2026ஆம் ஆண்டு ஏபெக் சிஇஓ உச்சி மாநாட்டில் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஆற்றிய சிறப்புரையில், 15வது ஐந்தாண்டுத் திட்டம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும் உலக அளவிலும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளின் பட்டியலை வழங்குகிறது என்றும், இது உலகளாவிய தொழில் மற்றும் வணிக துறைக்கு சீனா வழங்கும் ஒரு ஒத்துழைப்புக்கான அழைப்பு என்றும் சுட்டிக்காட்டினார்.

அந்த உரையைக் கேட்ட பிறகு, பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளிடையே “ஊக்கம் தருவதாக அமைதல்” “நம்பிக்கையை அதிகரித்தல்” போன்ற பொதுவான உணர்வுகள் வெளிப்பட்டன.

தாய்லாந்தின் டிபிசி(TPC)குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி சூ சின்சியோங் கூறுகையில், சீனாவின் 15வது ஐந்தாண்டுத் திட்டம் நுகர்வை அதிகரிப்பதை வலியுறுத்துகிறது என்றும், இது அனைத்து நிறுவனங்களுக்கும் நன்மை பயக்கும் என்றும் கூறினார். மேலும், சீன சந்தைக்கு மேலும் உயர்தரமான தயாரிப்புகளைக் கொண்டுவர நாம் ஒன்றிணைந்து செயல்படலாம் என்றும், அதே நேரத்தில் சீனாவின் புதுமையான சாதனைகளை மற்ற ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் போயிங் தொழில் நிறுவனத்துக்கான சீனாவின் தலைவர் லூ யிமிங் கூறுகையில், அடுத்த 20 ஆண்டுகளில், சீனா உலகின் மிகப்பெரிய ஒற்றை சிவில் விமானப் போக்குவரத்து சந்தையாக மாறும். அப்போது, சுமார் 9240 விமானங்களுக்கான தேவை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீனச் சந்தை வளர்ச்சியும், அது கொண்டு வரும் தொடர்பும் இணைப்பும், விமானத் துறைக்கும் ஏபெக் (APEC) பிராந்தியத்திற்கும் ஒரு பெரும் வாய்ப்பை வழங்குகின்றன என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author