உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் ராணுவ போக்குவரத்து விமானம்  

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் வதோதராவில் சி-295 ராணுவ விமானங்களுக்கான புதிய தயாரிப்பு ஆலையை தொடங்கி வைக்க உள்ளனர்.
இது இந்தியாவின் பாதுகாப்பு விமான உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க படியாகும். ஏர்பஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் உடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் இந்த தொழிற்சாலையை நிறுவியுள்ளது.
இந்த தொழிற்சாலை முதற்கட்டமாக, இந்திய விமானப்படை ஆர்டர் செய்த 56 சி-295 ராணுவ போக்குவரத்து விமானங்களில் 40ஐ தயாரிக்க உள்ளது.
இதன் முதல் விமானம் செப்டம்பர் 2026க்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author