சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி ஹே யீச்செங்குடன் டிசம்பர் 18ஆம் நாள் பிற்பகல் சந்திப்பு நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், உங்களின் தலைமையில், நடப்பு சிறப்புப் பிரதேசத்தின் அரசு, மக்கௌவின் பல்வேறு சமூக துறைகளுடன் ஒன்றுபட்டு, “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையை உறுதியுடன் பின்பற்றி, நாட்டின் அரசுரிமை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன் ஆகியவற்றைப் பேணிக்காத்து, செழுமையான மற்றும் நிதானமான நிலைமையை வலுப்படுத்தி வருகிறது என்றார்.
மேலும், நீங்கள் புதிய நிர்வாக அதிகாரி மற்றும் அவரின் நிர்வாகக் குழுவுக்கு ஆக்கமுடன் ஆதரவளித்து, மக்கௌ மற்றும் நாட்டின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.