லெபனானில் இயங்கும் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கொல்லப்பட்டார்.
அவரை அடுத்து தலைவராக தேர்வு செய்யப்பட இருந்த ஹஷெம் சஃபீதினும் அடுத்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்டார். இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் வழக்கமான நடைமுறைப்படி ஷூரா கவுன்சில் கூடி நைம் காசிமை பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.