பல்வேறு தரப்புகளின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், ஐரோப்பிய ஒன்றியக் கமிட்டி உள்ளூர் நேரப்படி 29ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, அக்டோபர் 31ஆம் நாள் தொடக்கம், 5 ஆண்டுகளில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள் மீது சலுகைகளுக்கு எதிரான வரி வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த முடிவுக்குச் சீனா உறுதியான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு செயல்கள் நியாயமற்றது. விதிகளுக்கும் இவை புறம்பானது. நியாயமான போட்டி என்கின்ற சாக்குப்போக்கில், நியாயமற்ற போட்டியை விரைவுபடுத்துவதோடு, வர்த்தக பாதுகாப்புவாதத்திற்கு இது ஆதரவளித்துள்ளது எனச் சீனா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரக் கொள்கை மேலும் பழமைவாதம் மற்றும் அரசியல்மயமாக்கம் மிக்கதாக மாறி வருவதும், அமெரிக்காவுடன் இணைந்து, சீனாவைக் கட்டுப்படுத்துவதும் இதன் காரணிகளாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இச்செயல், முற்றிலும் தோல்வியடையும் என்பதோடு, ஐரோப்பிய ஒன்றியம் இதற்கான பதிலையும் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். ஐரோப்பிய ஒன்றியம் தனக்குத் தானே பாதிப்பை ஏற்படுத்தும் முடிவை எடுத்துள்ளது.
பொருளாதார ரீதியில், வாகன தொழிலின் உற்பத்தி மற்றும் வினியோகச் சங்கிலியின் நிதானத்திற்கு இது தீங்கு விளைவிக்கும். ஐரோப்பாவின் வாகன நிறுவனங்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களைப் பாதிக்கும். தவிரவும். சீன-ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டு ஒத்துழைப்புக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். ஐரோப்பாவில் தொழில் நடத்தும் சூழல் குறித்து கவலை ஏற்படும்.
மேலும் ஆழமான ரீதியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இச்செயல், உள்புறத்தின் பிரிவினையைத் தீவிரமாக்கி, அரசியல் ரீதியில் பதில் கொடுக்க வேண்டிய நிலைக்குக் கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.