உத்தரகாண்ட் மாநிலத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து மலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. நைனி டண்டாவில் இருந்து ராம் நகர் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40 பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த பேருந்து அல்மோரா மாவட்டத்தில் உள்ள மலைமீது சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைச்சரிவில் சரிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் படுகாயம் அடைந்த பலர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.