மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரித்த 6,900 ஊழல் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணைக்காக காத்திருப்பதாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) தெரிவித்துள்ளது.
இவற்றில் 361 வழக்குகள் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதாக சிவிசி மேலும் கூறியுள்ளது.
மேலும் 658 ஊழல் வழக்குகள் இன்னும் சிபிஐ விசாரணையில் இருப்பதாகவும், அவற்றில் 48 வழக்குகள் ஐந்தாண்டுகளாக தீர்க்கப்படாமல் இருப்பதாகவும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.