சீன-அமெரிக்க உறவுகளில் மக்களின் பங்கு குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சான் ஃபிரான்சிஸ்கோவில் புதன்கிழமை நடைபெற்ற வரவேற்பு விருந்தில் பேசிய போது வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில் சீன-அமெரிக்க உறவுகளின் அடித்தளம், இரு நாட்டு மக்களால் அமைக்கப்பட்டது. சீன-அமெரிக்க உறவுகளின் கதவு மக்களால் திறந்து வைக்கப்பட்டது. சீன-அமெரிக்க கதைகள், மக்களால் எழுதப்பட்டு வருகின்றன.
சீன-அமெரிக்க உறவின் எதிர்காலம், இரு நாட்டு மக்களால் உருவாக்கப்படும் என்று சுட்டிக்காட்டினார். மக்களிடையேயான தொடர்புகளுக்கு மேலதிக பாலங்களை கட்டியமைத்து மேலும் சாலைகளை வழிவகுக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.
இரு நாடுகளின் மக்களிடையே பரிமாற்றங்களை அதிகரிக்கும் இலக்குடன், அடுத்த 5 ஆண்டுகளில் 50ஆயிரம் அமெரிக்க இளைஞர்கள், பரிமாற்றம் மற்றும் கல்விபயிலும் திட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அழைப்பதற்கு சீனா தயார் செய்கிறது என்று ஷிச்சின்பின் கூறினார்.