சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங், நவம்பர் 4ஆம் நாள் பிற்பகல் முதல் 5ஆம் நாள் முற்பகல் வரை, ஹுபெய் மாநிலத்தின் சியௌகான் மற்றும் சியான்நிங் நகரங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
இப்பயணத்தின்போது, யுன்மேங் மாவட்டத்தின் அருங்காட்சியகம், ஜியாயூ மாவட்டத்தின் காய்கறிகள் வளர்ப்பு மண்டலம், ஸியி கிராமம் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டு, உள்ளூர் தொல் பொருட்களுக்கான பாதுகாப்பு மற்றும் பயன்பாடு, கிராமங்களின் பன்முக மறுமலர்ச்சி உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.