சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் புத்தாண்டு வாழ்த்துரை

Estimated read time 1 min read

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீன ஊடகக் குழுமம் மற்றும் இணைய வழியாக 2024ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்து உரை நிகழ்த்தினார்.


2023ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் தொடர்ச்சியாக நல்ல வளர்ச்சியை நோக்கி சென்றது. உயர் தரமான வளர்ச்சி முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. நவீனமயமான தொழிற்துறை அமைப்பு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னேறிய நுண்ணறிவார்ந்த மற்றும் பசுமைசார் புதிய முக்கிய தொழில்கள் வேகமாக எழுந்து வருகின்றன. தானிய உற்பத்தியில் தொடர்ந்து 20வது ஆண்டாக அமோக அறுவடை செய்யப்பட்டுள்ளது. தெளிந்த நீர் மற்றும் பசுமை மலை குறித்த சூழலியல் கட்டுமானத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

கிராமங்கள் புத்துயிர் பெறுவதில் புதிய தோற்றம் கண்டுள்ளது. வடக்கிழக்கு பகுதியில் விரிவான வளர்ச்சித் திட்டத்தில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. சியோங் ஆன் புதிய பகுதியில் கட்டுமானப் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. யாங்சே ஆற்றுப் பொருளாதார மண்டலத்தில் உயிராற்றல் வாய்ந்த வளர்ச்சி அடைந்துள்ளது.

குவாங்டொங்-ஹாங்காங்-மாக்காவ் பெரிய விரிகுடா பகுதி, சீர்திருத்தம் மற்றும் திறப்புத் துறையின் முன்னணியில் உள்ளது. சீனப் பொருளாதாரம், அறைகூவல்களை எதிர்கொண்டு வலுவான வளர்ச்சியை கண்டுள்ளது.

மேலும், சி919 பெரிய ரக பயணியர் விமானம், வணிகம் ரீதியாக இயங்குவது, பெரிய ரக சொகுசு கப்பலின் சோதனைப் பயணம், ஷென்சோ தொகுதியைச் சேர்ந்த விண்வெளித் திட்டம், ஃபெங்டோவ்செ எனும் இயந்திரம் ஆழ்கடலில் மூழ்கி புதிய பதிவை உருவாக்கியது ஆகிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

சீனாவில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட புதிய கைப்பேசி, புதிய ஆற்றல் வாகனம், லித்தியம் மின்கலம், சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்கள் ஆகியவை சந்தையில் அதிக வரவேற்பு பெற்று, சீனத் தயாரிப்புகளின் செல்வாக்கை மேம்படுத்தியுள்ளன என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.


மக்கள் நல்ல வாழ்க்கையை வாழ்வதற்குப் பாடுபடுவது நமது இலக்கு. குழந்தைகளுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, முதியோருக்கு மருத்துவம் மற்றும் காப்புறுதி அளிப்பது என்பது, குடும்ப விவகாரம். இதுவே, நாட்டின் விவகாரமும் ஆகும்.

இதற்காக, அனைவரும் கூட்டாக முயற்சி மேற்கொண்டு, இதைச் செவ்வனே செய்ய வேண்டும். தற்போது, சமூகம் விரைவாக வளர்ந்து வருகிறது. அனைவரும் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகின்றனர். வேலை மற்றும் வாழ்க்கை ரீதியான அழுத்தம் அதிகம். எனவே, அன்புள்ள மற்றும் நல்லிணக்கமான சமூக சூழ்நிலையை உருவாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய மனதுடன் புத்தாக்கம் செய்வதற்கான இடத்தை விரிவாக்கி, வசதியான வாழ்க்கையை உருவாக்க வேண்டும். இந்நிலையில், அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதுடன், கனவை நனவாக்கி வருகின்றனர்.


தற்போது, உலகின் சில இடங்கள் இன்னும் போரில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. அமைதியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு சீன மக்கள் சர்வதேச சமூகத்துடன் இணைந்து மனிதகுலத்தின் எதிர்காலம் மற்றும் மக்களின் நலன்களுக்காக பொது எதிர்காலச் சமூகத்தைக் கட்டியெழுப்பி அருமையான உலகத்தை உருவாக்கப் பாடுபடுவர் என்று ஷிச்சின்பிங் தனது உரையில் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author