தமிழக அரசின் சமீபத்திய முடிவின்படி, ஆறுகள், கால்வாய்கள், மற்றும் ஓடைகளில் கிடைக்கும் நீரைக் கொண்டு உள்ளூர் மின் உற்பத்தியை ஊக்குவிக்குமாறு சிறிய அளவிலான சிறுபுனல் மின் திட்டங்களை உருவாக்குவதற்கான கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
எரிசக்தி துறை செயலர் (பொறுப்பு) பிரதீப் யாதவ் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில், புதிய கொள்கை குறித்து கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு, 100 கிலோவாட் முதல் 10 மெகாவாட் வரையிலான மின்நிலைய திறனை கொண்ட சிறு புனல் மின் திட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இது உள்ளூர் மின் உற்பத்திக்கான வாய்ப்புகளை வழங்குவதுடன், ஊரக பகுதிகளில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.