சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பங்கும், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினும் டிசம்பர் 31ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பில், ரஷிய அரசுத் தலைவருக்கும், ரஷிய மக்களுக்கும் ஷி ச்சின்பிங் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், 2023ஆம் ஆண்டு, கொந்தளிப்பான சர்வதேச நிலைமையில், சீன-ரஷிய உறவு சீரான வளர்ச்சியடைந்து,
சரியான திசையை நோக்கி முன்னேறி வருகிறது. இரு நாட்டு அரசுத் தலைவர்களின் கூட்டு வழிகாட்டலில், இரு நாட்டு அரசியல் நம்பிக்கை மேலும் ஆழமாகி வருவதுடன், நெடுநோக்கு ஒத்துழைப்புகள் புதிய சாதனைகளைப் பெற்றுள்ளன என்றார்.
மேலும், இரு நாட்டுத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன-ரஷிய பண்பாட்டு ஆண்டு நிகழ்வை வாய்ப்பாக கொண்டு, இரு நாடுகள் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரிப்பது, ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது, நட்புறவை வெளிக்கொணர்வது ஆகியவற்றுக்கு ரஷிய அரசுத் தலைவர் புதினுடன் இணைந்து வழிக்காட்ட விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
புதின் கூறுகையில், 2023ஆம் ஆண்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்குடன் மேற்கொண்ட சந்திப்பு, புதிய யுகத்தில் ரஷிய-சீன பங்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவின் வளர்ச்சிக்கு வலிமையான இயக்காற்றலை ஊட்டியுள்ளது.
இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், பல்வேறு துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்புகள் மேலும் பெரும் சாதனைகளைப் பெறுவது உறுதி என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
அதேநாள், சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங்கும், ரஷியத் தலைமையமைச்சர் மிஷுஸ்டினும் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.